உலகில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம் கொடுக்கின்ற மிகமோசமான சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நிகழ்வுதான் கடந்த வாரம் இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான அல்ஜசீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே ஒருவரின் படுகொலையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலனித்துவ கொள்கையை பின்பற்றி, கைப்பற்றியுள்ள பலஸ்தீன் பூமியில் இஸ்ரேல் இராணுவம் நிகழ்த்தி உள்ள கொடூர சம்பவம் காட்டுவது என்னவென்றால் உலகெங்கிலும் அடக்குமுறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக்காகியுள்ள மக்களின் குரலை தணிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான செயலாகும்.
மேலும். இந்தப் படுகொலையானது உலக ஊடகவியலாளர்களின் உள்ளங்களில் மாத்திரமன்றி உலக வாழ் மக்களின் உள்ளங்களிலும் கருப்புப் புளியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக மற்றும் பாதுகாப்பாக தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
உலகில் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் இணைத்துக் கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் வீற்றிருக்கும் நாமும் நினைவு படுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.