அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்ளாள் சகலதுறை வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சைமண்ட்ஸ் நேற்றிரவு 10.30 மணியளவில் கார் விபத்தில் சிக்கியதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி 46 வயதாகும் சைமன்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வசித்து வந்த டவுன்ஸ்வில்லே (Townsville) நகரிற்கு வெளியே சனிக்கிழமை (14) இடம்பெற்ற கோர கார் விபத்திலேயே உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸ் குறிப்பிட்டிருக்கின்றது.
விபத்து ஏற்பட்டதன் பின்னர் அவசர மருத்துவ சேவைப் பிரிவானது அன்ட்ரூ சைமன்ட்ஸ் இணை காப்பற்ற முயற்சித்திருந்த போதும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் மூலம் அவர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கதாநாயகர்களான ஷேன் வோர்ன், ரோட் மார்ஷ் ஆகியோரின் இறப்பிற்கு பின், மூன்றாவதாக அன்ட்ரூ சைமன்ட்ஸின் இறப்பும் சம்பவித்துள்ள நிலையில் இந்த நிகழ்வு அவுஸ்திரேலிய கிரிக்கெட் இரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக, 198 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அன்ட்ரூ சைமன்ட்ஸ் அவுஸ்திரேலியா வென்ற இரண்டு (2003, 2007) கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர்களுக்கான அணிகளிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் அன்ட்ரூ சைமன்ட்ஸ் கென்ட், குளோகெஸ்டர்சைர், லங்கஷைர் மற்றும் சர்ரேய் அணிகளுக்காக கவுண்டி போட்டித் தொடர்களில் பங்கேற்ற வீரராகவும் காணப்பட்டிருந்தார்.
அதேநேரம் அன்ட்ரூ சைமன்ட்ஸ் இன் மரணச் செய்தியானது உலகெங்கிலும் இருக்கின்ற கிரிக்கெட் இரசிகர்களுக்கும் கவலை தரும் விடயமாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.