இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவுடன் கொள்கைப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகும் வகையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
அத்தோடு ‘அதிகரிக்கும் சமூக பதற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான ‘தொழில்நுட்ப மட்ட’ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன, புதிய இலங்கை அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு தயாராக இருக்கும் வகையில் தொடரும் என நோசாகி கூறினார்.