கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழத்து தெரிவித்து டுவிட்டர் பதிவிலே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, இன்றைய தலைமுறை மாணவர்கள் இக்கட்டான நேரத்தில் ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, ஆனால் கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் இலக்குகளை அடைய ஆசீர்வதிப்பதாகவும் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.