‘என்னிடம் உடுத்திக் கொள்ள ஆடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன’: சபையில் நிமல் லான்சா

Date:

தற்போது உடுத்திக் கொள்ள ஆடைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே நிமல் லன்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்று (18) பாராளுமன்றத்தில் பேசும் போது அவ்வப்போது அழுதவாறு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

அண்மைய நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்காமல் நியாயமான விசாரணையை கோருவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ ஈடுபடவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய குழு தொடர்பில் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பரம்பரை பரம்பரையாக தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்றதையும், அவர்களின் வன்முறைச் செயல்களால் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பல நண்பர்கள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், பிரபல ஹோட்டல் அதிபர் ஒருவர் தன்னை தனது விடுதியில் தங்குமாறு அழைத்ததாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் பொருளாதார நெருக்கடியில் ஒருவரையொருவர் கொன்றால் இந்த நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...