எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் எரிபொருள் வழங்கப்படாது: அமைச்சர் கடும் முடிவு!

Date:

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பல்வேறு எரிபொருள் நிலையங்களுக்கு தாங்கிகளின் ஓட்டுநர்கள் திருப்பி விடாவிட்டால், எரிபொருள் தாங்கிகளுக்கு தீ வைப்போம் என்று ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அச்சுறுத்தியதால், எரிபொருள் தாங்கிகள் சில பகுதிகளுக்கு செல்வது சிரமமாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தடுத்து கலகத்தை ஏற்படுத்தினால், எரிபொருள் நிரப்பப்படாது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று காலையும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இது தொடர்ந்தால், போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும்’ என்று அவர் கூறினார்.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வினவியபோது, பல தடவைகள் வன்முறைக் கும்பல்களால் எரிபொருள் பாரவூர்திகள் சுற்றிவளைக்கப்பட்ட சம்பவங்கள் இருப்பதா தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் வாகனங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...