‘ஐ.பி.எல்’ இறுதிப் போட்டி: குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்!

Date:

15ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு இந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

வெற்றிக் கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதேவேளை, இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...