ஐ.பி.எல். போட்டிகள்: பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி அணி?

Date:

ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் இருக்கிறது.

அதற்கமைய டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும்.

ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை (-0.253) விட டெல்லி அணியின் ரன்-ரேட் (100.255) உயர்வாக இருக்கிறது.

மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும்.

எனவே இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு மிகப்பெரும் சவாலான போராட்டமாகும். கடந்த 2 லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்த உத்வேகத்துடன் டெல்லி அணி உள்ளது.
அந்த அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் (427 ரன்கள்), ரிஷாப் பண்ட், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரோமன் பவெலும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், அன்ரிச் நோர்டியா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.

இதேவேளை இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் பெங்களூரு அணி எளிதில் பிளேஆப் சுற்றுக்கு சென்றுவிடும். எனவே இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் நாளை நடக்கிறது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...