இன்று பாடசாலை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. க.பொ.த (சா/த) பரீட்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.
பரீட்சை மண்டபங்களைத் தயாரிக்கும் பணிகளுக்கு உதவுவதற்காக பரீட்சை மண்டபங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் இன்றைய தினம் சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்கான ஜூம் தொழிநுட்பம் தொடர்பான கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை வேறு ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் திங்கட்கிழமை (23) பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.