காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

Date:

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன் அனைவரும் இணைந்து இ ஈத் உணவும் பரிமாறப்பட்டன.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிர்புறத்தில் பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஈதுல் பித்ரை நினைவுகூரும் வகையில் 700 மதிய உணவுப் பொட்டலங்களை ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் இன்று நன்கொடையாக வழங்கினர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...