குழந்தைக்கு தவறான மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள்: 10 லட்சம் சவூதி ரியால் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு!

Date:

சவுதி அரேபியாவில் மருத்துவத் துறையின் மூலம் குழந்தைக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திய 3 பேர் கொண்ட மருத்துவ குழுவிற்கு 10 லட்சம் சவூதி ரியால் இழப்பீடு வழங்குமாறு ஷரியா சுகாதார வாரியம் வழங்கிய தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மூன்று மருத்துவரை கொண்ட மருத்துவக்குழு பிரசவத்தின்போது ஒரு பிழையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் விளைவாக பிறந்த குழந்தை பாதிக்கப்பட்டு இறுதியில் அனைத்து உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கியது.

குழந்தையின் தந்தை மற்றும் தாய் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் படி குறைந்தது அடுத்த 40 ஆண்டுகளுக்கு மருத்துவ பிழையின் விளைவாக முடங்கிப்போய் இருக்கும் குழந்தையின் சிகிச்சை செலவிற்காக பெற்றோர்கள் 100 மில்லியன் ரியால் இழப்பீடு கோரினர்.

மருத்துவப் பிழையினால் ஏற்பட்ட பக்க விளைவுகள், குறைபாடுகள், தசை சிதைவு, மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளுடன் குறைபாட்டை ஏற்படுத்தியது என்றும் அக்குழந்தையின் தந்தை குறிப்பிட்டார்.

மருத்துவப் பிழையின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் என்னால் தாங்க முடியவில்லை என்றும் எனது மனைவி இதன் காரணமாக ஓய்வு எடுக்கவில்லை என்றும் வழக்கின் போது தந்தை விளக்கினார். மேலும் 10 இலட்சம் ரியால்க்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் காப்பீடு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது மகனின் உடல்நிலை பின் தொடர்வதற்கு நிரந்தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை தேவை என்றும் இதற்காக அதிக செலவை கொண்டிருப்பதாகவும் குறிப்பாக பல மருத்துவ உபகரணங்கள் தேவை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

கல்வி, வேலை, சாதாரண சமூக வாழ்க்கைக்கான வாய்ப்புக்களை தனது மகன் இழந்துள்ளதை குறித்தும் அவர் மேலும் கவலை தெரிவித்தார்.

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...