கோட்டா கோ கம போராட்டக்களத்தை தாக்கியவர்கள் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை?:ருவான் விஜேவர்தன கேள்வி

Date:

கோட்டாகோ கம போராட்டக்களத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை.

எனினும் தாக்குதலுக்குப் பின்னரான வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்வதை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோட்ட கோ கம போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி தீர்வு காணும் பரந்த பொறுப்பை தம்மிடம் ஒப்படைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோட்டா கம மீதான தாக்குதல் தொடர்பான பிரதான சந்தேக நபர்களை கைது செய்யாமைக்கான காரணங்களையும் விசாரணையின் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துமாறு விஜேவர்தன பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது தாக்கிய முக்கிய நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அன்றைய வன்முறைக்கு காரணமான பல சந்தேக நபர்களை குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜேவர்தன கூறினார்.

அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் அண்மையில் தாக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரின் திறமையான சேவையைப் பாராட்டுவதாகத் தெரிவித்த அவர் ஏனைய பிரதான சந்தேகநபர்கள் எவரையும் இதுவரை பொலிஸாரால் கைது செய்யமுடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும் எனவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...