சமையல் எரிவாயு ஜூன் 01 மீண்டும் விநியோகிக்கப்படும்!:’பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர 37,000 மெற்றிக் தொன் எரிவாயு தேவை’

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

3,500 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு கொண்ட ஏற்றுமதி நாளை நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பை வந்தடைய உள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

வானிலை சீரடைந்தால், கெரவலப்பிட்டிய லிட்ரோ தரையிறங்கும் முனையத்தில் கப்பல் நங்கூரமிட முடியும் என்றும், அதன்பின் 10 மணி நேரம் ஆகும் என்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், வரும் புதன்கிழமை (25ஆம்திகதி) காலை முதல் விநியோகத்தை தொடங்க முடியும் என அதிகாரி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தற்போது சுமார் 37,000 மெற்றிக் தொன் எரிவாயு தேவைப்படுகிறது.

இதற்காக குறைந்தபட்சம் 10 எரிவாயு கலன்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெற்றிடமாக உள்ள உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக லிட்ரோ நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தொழிற்சாலை பயன்பாட்டுக்கான 37.5 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் மற்றும் வணிக நோக்கங்களுக்கான எரிவாயு இருப்புக்கள் நேற்று முதல வழங்கப்படவில்லை.

நாட்டில் எரிவாயு இருப்புக்கள் குறைந்து வருவதே இதற்குக் காரணம். இதேவேளை, வீட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்றும் இடம்பெறாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.

எனவே, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விடுவது கடந்த 24ம் திகதி நிறுத்தப்பட்டது. அதன்படி இன்று 6வது நாளாக உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பவில்லை.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...