அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய திருமணமான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் குற்றம் தொடர்பாக பொலிஸாரால் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமியின் பிரதே பரிசோதனை அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளன.
வெள்ளிக்கிழமை காணாமல் போன சிறுமியின் சடலம், அட்டுளுகமவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதேசத்தில் பலரிடம் பொலிஸார் வாக்குமூலங்கள் பதிவு செய்கின்றது.