ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...