நாளாந்தம் சராசரியாக 4,000 மெற்றிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை, அனல்மின்நிலையம் புனரமைக்கப்படும் வரை ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஒட்டோ டீசல் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களில் இருந்து இறக்கப்பட உள்ளதாக அமைச்சர் இன்று டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளின் தரம் தொடர்பில் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.