நாட்டின் வருங்கால சந்ததியை பாதுகாக்க தவறிவிட்டோம்: சாணக்கியன்

Date:

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது பாத்திமா ஆயிஷாவுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் சிறுமியின் மரணம் தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வருங்கால சந்ததியையும் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுமியின் மரணத்திற்காக காரணமானவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இவ் அரசாங்கம் சிறிய மற்றும் அற்பமான தொகையே வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறுவர்களே நாளைய எமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...