தொடர்ச்சியான மின்வெட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. மின்சாரத்தை நம்பி இயங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பரந்தளவிலான தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமல் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக மக்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமூகத்தின் சகல இனத்தவர்களையும் சகல சமூக மட்டங்களையும் பிரதிநிதித்துப்படுத்தும் மக்கள் சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான விசேட கூட்டம் நேற்று இன்று கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்பேதே இநத கூட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆலேசாணைகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வரிசையில் காத்திருக்கும் மக்கள் விழுந்து இறக்கின்றனர். அநீதிக்கு எதிராக போராடுவோர், பொலிஸாரின் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பௌத்த சங்கத்தின் மூன்று மகா பீடங்களின் தலைமை பீடாதிபதிகளும், நாட்டின் நிலைமை குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர்.
அரசாங்கம் எல்லா விடயங்களையும் குழப்பி, நெருக்கடியை மோசமாக்கியுள்ளது என்பதை பல உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. விவசாயத்தை 100% இயற்கை விவசாயமாக மாற்றிய உலகின் முதல் நாடு என்று கூறி, இரசாயன உரப் பயன்பாட்டை அரசாங்கம் தடை செய்தது.
ஆனால், நாட்டில் பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற சேதன உரத்தை இறக்குமதி செய்ய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலவிட்டது.
இதற்கிடையில், உணவு இறக்குமதிக்கான விலை கடுமையாக அதிகரித்த அதே சந்தர்ப்பத்தில், தன்னிறைவைக் கட்டியெழுப்ப பல தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் 12 முடிவடைந்தது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பணம் அனுப்பும்போது செலுத்தும் தொகைக்கு, செயற்கையான மாற்று விகிதம் பேணப்பட்டது.
பொருளாதாரத்தில் தொடங்கிய நெருக்கடி இப்போது முழு சமூக-அரசியல் கட்டமைப்பிலும் வியாபித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட இந்த போராட்டங்கள், இப்போது இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. காலி முகத்திடலிலிருந்து புதிய போராட்ட அலையொன்று நாடெங்கும் பரவியுள்ளது.
தவறுகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாலும், அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. தாம் விரும்பியவாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை, அவர்கள் நிர்வாகத்தில் உரிய முறையில் செயற்படாத காரணத்தால் பதவி விலக்கியமை மாத்திரம் போதுமான நடவடிக்கையாக அமையாது.
நியாயமாக, போராட்டங்களில் ஜனாதிபதி தமது இராஜினாமாவை கையளிக்க வேண்டும். தவறான தீர்மானங்களை அங்கீகரித்த அமைச்சரவை, அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் இருந்து ஜனாதிபதியும் ராஜபக்ஷ குடும்பத்தினரும் வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. கருத்துக் கணிப்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
அமைதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான தீர்வுகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கும் அபாயத்திற்கு இந்த நிலைமை வழிவகுத்துள்ளது.
கடனை மறுசீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறையை நீக்குவதற்கான திட்டங்கள் மிக விரைவாக செயற்படுத்தப்படாவிட்டால், எதிர்வரும் மாதங்களில் தினசரி வாழ்க்கை 13 மேலும் மோசமடையக்கூடும்.
இது வன்முறை ஏற்படும் அபாயத்திற்கு மேலும் வழிவகுக்கும். பௌத்த சங்கத்தின் மூன்று மகா பீடங்களின் தலைமை பீடாதிபதிகளும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, அமைச்சரவையில் வெறுமனே அமைச்சர்களை மாத்திரம் மாற்றுவது பயனளிக்காது என்பது நிரூபணமாகியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி வெளியிட்ட முன்மொழிவுகளும், பௌத்த பீடாதிபதிகளின் அறிக்கையின் சாராம்சமும், குறிப்பாக இடைக்கால அரசாங்கம் மற்றும் 20ஆவது திருத்தம் தொடர்பான ஆலோசனைகளின் அடிப்படையில் பல வழிகளில் ஒன்றோடு ஒன்று பொருந்துகின்றது.
மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறக்கூடிய மற்றும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு சிறப்பாக எடுத்துக்கூறக்கூடிய தலைமையின்றி, இந்த இலக்கை வெற்றிகரமாக அடைய முடியாது. மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் இன்றி, நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் மக்களின் துன்பங்களைக் குறைப்பதற்கும் எந்த வழியும் கிடையாது.
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தமானது, நிறைவேற்று அதிகாரத்தை அதியுச்ச ஆதிக்க நிலைக்கு கொண்டுவந்து, சட்டமன்றத்தை அதிகாரமற்றதாக்கியது.
இதனை விரைவாக மாற்றியமைக்கும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை, ஏப்ரல் 20ஆம் திகதி பௌத்த சங்கத்தின் மூன்று மகா பீடங்களின் தலைமை பீடாதிபதிகளும் வெளியிட்ட அறிக்கை உணர்த்துகின்றது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒரு இடத்தில் குவித்து வைத்திருப்பதானது, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தடையாக காணப்படுகின்றது. இதற்கான 14 அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும், அது புறக்கணிக்கப்பட்டது.
அதற்கான காரணம் வெளியாகவில்லை. இச்செயன்முறையை துரிதப்படுத்துவதற்கான ஒரு வழியாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 முன்மொழிவுகள் காணப்படுகின்றன. தாமதித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் துயரங்களை மேலும் அதிகமாக்கும்.
ஆகவே, இந்நடவடிக்கைகள் யாவும் குறிப்பிட்ட காலக்கெடுவை கொண்டிருக்க வேண்டியது அவசியம். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த 13 முன்மொழிவுகளின் சாரம்சம் கீழே தரப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில மாற்றங்களையும் திருத்தங்களையும் அவற்றுடன் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
1. அனைத்து செயற்பாடுகளும் அரசியல் யாப்புக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்.
2. 20ஆவது திருத்தச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, 21ஆம் திருத்தச் சட்டம் மீளக் கொண்டுவரப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது இருப்பதைப் போன்றே பேணப்பட வேண்டும்.
3. மத்திய வங்கியின் ஆளுநர், நாணய சபை என்பவற்றை அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே நியமிக்க வேண்டும். அமைச்சுகளுக்கான செயலாளர்கள் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் போன்ற விடயங்கள் 21ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
4. அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கலுடன், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களும் நியமிக்கப்படுவதுடன், நீதிச் சேவைகள் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.
5. ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது.
6. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை விரைவாக நீக்க வேண்டும். இது 15 மாதத்திற்குள் நடைபெற வேண்டும்.
நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்பட்டு, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்படுவதுடன், இவர்கள் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும்.
7. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 15 பேரைக் கொண்ட இடைக்கால தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உடனடியாக நிறுவ வேண்டும்.
பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் இருக்க வேண்டும்.
பாராளுமன்றில் அவ்வாறான யாரும் இல்லையாயின், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜிநாமா செய்வதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி, தேசிய பட்டியல் ஊடாக ஒருவரைக் கொண்டுவந்து அவரை பிரதமராக நியமிக்கலாம்.
8. இடைக்கால அரசாங்கத்திற்கு அனைத்து தொழில், வர்த்தக, சிவில், சமூக அமைப்புகளுடன் கலந்தாலோசித்து 15 பேர் கொண்ட ஒரு சுயாதீன ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
15 அமைச்சுகளுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கியதாக இச்சபை அமைய வேண்டும். அனைத்து முக்கிய கொள்கை ரீதியான முடிவுகளும் வெளிப்படையான முறையில் இந்த ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டும்.
9. விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை (29 ஜனவரி 2021 இன் வர்த்தமானி இல. 2212/53) இரத்துச் செய்தல் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (2020 ஜனவரி 9 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 2157/44) நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
10. இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை கவனத்திற்கொள்வதைக் கொண்டு, நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றை தேசிய ஐக்கிய அமைச்சரவை தயாரிக்கும்.
பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டமானது பின்வரும் விடயங்களில் பிரதானமாக கவனஞ்செலுத்தும்.
கடன் மீள் கட்டமைப்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் நிலுவையிலுள்ள இருதரப்பு பங்காளிகளிடம் இருந்து நிதியைப் பெறுதல், அத்தியவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வு, குற்றச் செயல்களுக்கான சட்டத்தை இயற்றுதல், அரச சொத்துக்களை மீட்டெடுத்தல், பிரதிநிதித்துவ ஜனநாயக நடைமுறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாராளுமன்ற ஆலோசனை மற்றும் மேற்பார்வைக் குழுக்களை அதிக அளவில் பயன ;படுத்துவது உள்ளிட்ட தீர்வுகள், அரசியல் கட்சிகளுக்கான நெறிமுறை மற்றும் பிரச்சார நிதி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான அனைத்து சீர்திருத்தங்களையும் நிறைவுசெய்தல் போன்றன பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
11. தயாரிக்கப்படுகின்ற பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் (Common Minimum Program – CMP), நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்தலையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
12. இந்த பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் (Common Minimum Program – CMP) அடிப்படையில் இடைக்கால அரசாங்கம், வரவு செலவுத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும்.
13. அமைக்கப்படுகின்ற தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் 18 மாதங்கள் மட்டுமே. அதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும். பொதுத்தேர்தல் நடத்தப்படும் வரை ஆறு வாரங்களுக்கு காபந்து அரசாங்கம் செயல்படும்.
மக்கள், அரசியல் கட்சிகள், இளைஞர்களில் பெரும்பான்மையானோர் கோருவதால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதை இனியும் ஒத்திவைக்க முடியாது. ஒற்றையாட்சி அரசை பாதுகாப்பதில் ஏற்படும் பாதிப்புகள், மத்திய மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான அதிகார சமநிலை மற்றும் தேர்தல் முறையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்.
அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட நடத்தை விதிகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சார செலவினங்களை கட்டுப்படுத்தவும், உரிய கணக்குகள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், விதிகளை மீறுபவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுதல் உள்ளிட்ட வழிகளில் அபராதம் விதிக்கவும் சட்ட விதிகள் இயற்றப்பட வேண்டும்.
தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிப்பதற்கும் அரச வளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆலோசனைக் குழுவை நியமிப்பதற்கான நடைமுறை தாமதப்படலாம் என்பதால், ஆலோசகர்களை அந்தந்த அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டு முதல் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையால் நியமிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பெரும்பாலான சிக்கல்கள் பொருளாதாரத்துடன் தொடர்புபட்டவை என்பதால், பொதுவான குறைந்தபட்சத் திட்டம் (CMP) பலப்படுத்தப்பட்டு, 18 முன்னுரிமையுடன் பிரதமரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதை அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் நியமன நிபந்தனையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
பொதுவான குறைந்தபட்சத் திட்டம் (CMP) இன் விவரங்களை உருவாக்குவது ஆலோசகர்கள் குழுவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
தங்களது செயற்பாடுகளால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் சேதங்களையும் ஏற்றுக்கொண்டு, போராட்டத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பதவி விலக வேண்டிய தார்மீக பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு உள்ளது.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் வன்முறை அலைகள் மற்றும் அத்துமீறல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதற்கு முன்னாள் பிரதமரே முதன்மைப் பொறுப்பாளியாக இருந்த போதிலும், இந்த நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கும், வினைத்திறனுடன் செயல்படாததற்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
ஜனாதிபதி பதவி விலகாவிட்டால், நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து சீர்படுத்துவதற்காக மேற்கூறிய விடயங்களை மேற்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவ்விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய முன்மொழிவுகளோடு ஒப்பிடுகையில், எளிதாக மற்றும் வேகமாக செயற்படுத்தக்கூடிய முன்மொழிவுகளாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை கருத்திற்கொள்ளலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட சிறிய மாற்றங்கள் சகிதம், குறித்த முன்மொழிவுகளை தாமதமின்றி செயற்படுத்த பரிந்துரைக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில், நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய, நிலையான, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை வேண்டி நிற்கின்றது.
எனவே, 19 மேற்கூறிய விடயத்தை அடைவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இந்த நெருக்கடிக்கு காரணமான அரசியல் காரணிகள் கவனிக்கப்படாவிட்டால், இத்தகைய நெருக்கடிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வழக்கமான வழிமுறைகளுக்கு அப்பால், மக்கள் இதில் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு பரவலாக தற்போது ஏற்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளில் பாராளுமன்ற ஆலோசனை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் போன்ற மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்வைத்த எட்டு அம்சத் திட்டம் உட்பட இன்னும் பல முன்மொழிவுகளில் இந்த விடயம் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நம் நாட்டுக்கு தேவையான மற்றும் பொருத்தமான முறையில் ஜனநாயகப் புத்தாக்கங்களை செயல்படுத்த சிறந்த வாய்ப்பாக இது காணப்படுகின்றது. மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கவே மக்கள் பேரவை முயல்கிறது.