பாதுகாப்பை விலக்கிய மறுநாளே பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை!

Date:

பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் இறந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் சித்து மூஸ் வாலா இறந்து விட்டதாகவும், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.

சித்து மூஸ்வாலா பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மான்சா சார்பில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கடந்த மாதம், சித்து மூஸ்வாலா தனது சமீபத்திய பாடலான ‘பலி ஆடு’ பாடலில் ஆம் ஆத்மி கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் குறிவைத்து சர்ச்சையை கிளப்பினார்.

அவர் தனது பாடலில் ஆம் ஆத்மி ஆதரவாளர்களை ‘கதர்’ (துரோகி) என்று அழைத்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது.

பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...