‘பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’

Date:

நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்காக பாராளுமன்ற வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துடைப்பம் தாங்கி தமது வீடுகளில் காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும், ஆண்களும் பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நடைபாதையின் இருபுறமும் திரண்டனர்.

எம்.பி.க்கள் யாராவது இருக்கிறார்களா என்று சாலையில் சாதாரண வாகனங்களை எட்டிப்பார்த்ததையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

பாராளுமன்றம் நிறைவடைந்ததையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கான கூடுதல் நுழைவாயில்களைப் பயன்படுத்தி எம்.பி.க்கள் வெளியே அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...