அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டை நடத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் பிரதி சபாநாயகராக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியமபலபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பிலே அவர் இவ்வ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, அரசாங்கம் அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்பதை இன்றைய வாக்கெடுப்பு தெளிவாகக் காட்டுகிறது.
அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றுமாறும், அனைத்து தலைமைகளையும் அகற்றுமாறும் கோரி நாட்டின் பொதுமக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில், இன்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கக் கூட்டணிக்குள் உள்ள ஒருவருக்கு வாக்களித்துள்ளனர். போராட்டத்தின் குரல் குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை என்பதையே இது நிரூபித்துள்ளது’ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேஷங்கள் வெளியாகின, மொட்டு கட்சியின் ஆதரவு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே தாம் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்க கட்சியின் கைப்பொம்மையாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செயற்படுகிறார் என்பது இன்று வெளியானது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.