மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம்: பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணை

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் சட்டத்தரணி நுவான் போபகே தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் இந்தக் குழுவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தனர்.

அதற்கமைய குறித்த விசாரணை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மிரிஹான கலவரம் தொடர்பில் 54 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (3) மற்றுமொரு குழுவிற்கு அழைப்பாணை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குழுவினரிடம் சம்பவம் தொடர்பிலும், சம்பந்தப்பட்ட நபர்கள், பஸ்களுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...