முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதி: கல்வி அமைச்சர்

Date:

நாளைய தினம் ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா ஆடையை அணிந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம், முகத்தை முழுமையாக மூடி பரீட்சையை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில பிரதேசங்களில் பர்தாவை அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசி கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் மண்டபத்துக்கு பிரவேசிக்க முன் தலையை மறைத்திருப்பவர்கள் தமது இரு காதுகளையும் திறந்து காட்ட வேண்டும், முகத்தை திறந்தே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பர்தாவை அகற்றி பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கிலிருந்து சில பெற்றோர் முஸ்லிம் கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்திருந்ததாக முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...