ராஜீவ் படுகொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்!

Date:

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்.

இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது.

ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு.

சுமார் 31ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் 2018 செப்டம்பரில் தமிழக அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நெடுங்காலமாக நடைபெற்று வரும் பேரறிவாளனின் விடுதலை வழக்கில் இன்று(மே 18) உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த தீர்ப்பாகவும் இது உள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையில் ‘பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம்.

குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை’ என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சென்ற மே 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா எனவும், கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் எனவும், இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக வாதம் முன் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது. தற்போது பேரறிவாளன் பரோலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...