அதிக விலைக்கு இறைச்சியை விற்பனை செய்யும் இறைச்சிக்கடை உரிமையாளரின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்!

Date:

இறைச்சிக்கடை உரிமையாளர்கள் 1 கிலோ கிராம் இறைச்சியை
1100.00 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களின் தகவல்களை உடனடியாக வழங்குமாறு குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பிரதேச மக்களின் நலன் கருதி விசேட கலந்துரையாடல் நேற்று (10) குச்சவெளி பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், அரச கால்நடை வைத்தியர் சுமங்கலா பிரதீஸ்வரன், நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை ஆகிய பகுதிகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர் மாலினி அசோக்குமார் உள்ளிட்ட பல உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாவட்ட செயலகத்தின் நிர்ணய விலையில் இருந்து மீறி அதிக விலைக்கு இறைச்சியை விற்பனை செய்யும் குத்தகையாளர்களின் இறைச்சிக்கடை அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் இறைச்சிக்காக வெளி மாவட்டங்களுக்கு ஏற்றப்படுகின்ற மாடுகளை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் குறுக்கே நிற்பதால் அதிகளவான வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல், பாடசாலை, வைத்தியசாலை மற்றும் பொது இடங்களிலும் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையின் கீழ் கால்நடை வைத்தியர் அலுவலகம், கிராம உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர்கள் ஒரு கூட்டிணைவாக இணைந்து கொண்டு செயற்படுவதன் மூலமே இந்த நீண்ட காலமாக பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும்.

அத்துடன் கால்நடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுகளை நடாத்தி அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு தொகையை வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்ற பல கருத்துக்களை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துக்களும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட அதேவேளை எதிர்வரும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்கியாவுக்காக மாடுகளை கொள்வனவு செய்பவர்கள் பிரதேசத்துக்குள்ளே மாடுகளை கொள்வனவு செய்யவேண்டும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...