அனுராதபுரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!

Date:

இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர் பல நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்டதாகவும், அண்மைய வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதன்படி கொஹுவல சந்தியில் இருந்து களுபோவில சந்தி வரையிலான ஒரு பாதை மூடப்பட்டது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...