அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் இ.போ.ச பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனினும் சில பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இன்னும் உள்ளன. இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடி வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.