அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.