சட்டத்தின் ஆட்சி சரிவு மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் இரங்கல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
கலகக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்து கொலைகளை செய்தும், வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தும் போதும் பொலிஸார் மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகளுக்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து அரசாங்கம் அவ்வாறு செய்ய அனுமதித்ததால் கலவரக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர் என்றார்.
‘சிங்கப்பூரில் தெருக்களில் எச்சில் துப்புவது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது, அதேசமயம் மக்கள் இங்கு பட்டப்பகலில் தெருக்களில் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.
சிங்கப்பூரில், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் ஒரு மாதத்திற்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.
தொழிற்சங்கங்களின் விருப்பப்படி இங்கு வேலைநிறுத்தங்கள் தொடங்கப்படுகின்றன.
மற்ற நாடுகளில் சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.