லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (6) இலங்கை வந்தடைந்தன.
இறக்கப்பட்ட பிறகு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கலாம் என்றும், நேற்றும் (05) 2500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகம் இன்று இடம்பெறாது எனவும், எரிவாயு விநியோகம் நாளை பிற்பகல் அல்லது நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.