இலங்கையர்களை வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Date:

வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரடட ஹெடக் (Ratata Hetak) சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரடட ஹெடக் (Ratata Hetak) நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது,
“கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரவரிசைகளின்படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த தர நிலையில் உள்ளது.
ஜப்பானியர்கள் விசா இல்லாமல் 190 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். ஆனால், விசா இல்லாமல் நாங்கள் செல்ல முடியுமா? என அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை நிகழிச்சியில் தொடர்ந்து கருத்துரைத்த களுகமகே, இதற்கு நாட்டின் அரசியல் அதிகாரிகளே முழுப்பொறுப்பாளிகள் என்பதை தாம் கடுமையாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தவில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் அதிகாரம் இருப்பதுதானாகும். அவர்கள் தங்கள் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறான பின்னணியில், திறமைகள் அதிகம் உள்ள இலங்கையர்கள் ஏமாற்றமடைவது தவிர்க்க முடியாததாகி விட்டது. அவர்களால் நாட்டை விட்டு வெளியேற அல்லது தங்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சரை விட சபாநாயகரே இவ்விடயத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...