இலங்கையை சேர்ந்த வயோதிப தம்பதி தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்பு!

Date:

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்று உள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...