உணவின்றி, பிள்ளைகள் பட்டினியில் வாடுவதைக் கண்டு தாய் தற்கொலைக்கு முயற்சி!

Date:

உணவு வழங்க வழியில்லாமல் தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதைக் கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன், தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக் கொள்ள முடியாத தாய், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாகவும் அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

(தகவல்- -எம்.செல்வராஜா)

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...