எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ!

Date:

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டை வந்தடைந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்றுடன் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2500 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்கலன் கொண்ட கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கையிருப்புடன் கூடிய கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...