நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அனைத்து பஸ் உரிமையாளர்களும் இயக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.
’20 சதவீத தனியார் பேருந்துகள் (4,000 பேருந்துகள்) தற்போதுள்ள டீசல் கையிருப்புடன் நாளை (15) மற்றும் மறுநாள் (16) நாடு முழுவதும் இயக்கப்படும்.
இதன் பின்னர், பஸ் இயக்கம் 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும். வெள்ளிக்கிழமைக்குள் நாங்கள் பேருந்துகளை இயக்க முடியாது.
எமக்கு அரசாங்கத்துடனோ அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ பிரச்சினைகள் இல்லை, ஆனால் தற்போதைய எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் நாம் வாழ வேண்டும்.
எனவே நாட்டுக்காக அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும்’ என கெமுனு விஜேரத்ன கூறினார்.
கொழும்பில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் மற்றும் சப்பெர்ப்களில் நேற்று தேவையான டீசல் கையிருப்பு வழங்கப்பட்டது, ஆனால் அது இன்று இல்லை, வரவிருக்கும் வாரங்கள் மிகவும் ஆபத்தானதாகத் தெரிகிறது.
மேலும் எரிபொருள் நெருக்கடி மாறாமல் நீடித்தால் மார்ச் 9ஆம் திகதி எதிர்பார்த்ததை விட அதிகமான வன்முறைச் சம்பவங்களை இந்த அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே இந்த நேரத்தில் அதற்கான தீர்வு மிகவும் அவசியம். நாட்டில் உள்ள மக்களின் அன்றாட தேவைகளை வழங்குவதற்கான உட்கட்டமைப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஒரு சில நிறுவனங்களின் தேவைக்காக இந்த நாட்டை அடகு வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.