‘கட்சி பேதமின்றி நியாயமாக நடந்து கொண்டேன்’ : ஐரோப்பிய தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Date:

ஐரோப்பிய தூதுவர்கள் குழுவொன்று இன்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போது, இலங்கைக்கு இக்கட்டான காலங்களில் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அந்தக்குழு உறுதியளித்துள்ளது.

நேற்று காலை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போதே தூதுவர்கள் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

மேலும், ‘ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருத வேண்டும்’ என்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து உறுதியான செய்தியை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்திற்கு இலங்கைக்கு இலகுவாக உதவ முடியும் என தூதுவர்கள் சுட்டிக்காட்டினர்.

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான நிலைமையை கருத்திற் கொண்டு விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச காணிகளை வழங்குவதற்கும் மக்களுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாம் ஒருபோதும் தலையிடவில்லை என்றும், கட்சி பேதமின்றி நியாயமாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த சந்திப்பில் முதலீடு, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய தூதர் டெனிஸ் சாய்பி (Denis Chaibi), பிரான்ஸ் தூதர் எரிக் லாவெர்டு(Eric Lavertu), இத்தாலி தூதர் ரீட்டா மன்னெல்லா(Rita Mannella), நோர்வே தூதர் டிரினா ஜோங்ரான்(Trine Jøranli Eskedal), டிரைனல் ஜோரன்(Tanja Gonggrijp, ஜெர்மனி தூதர் ஹோல்கர் லோதர் சீபர்ட்(Holger Lothar Seubert), ருமேனியாவின் தூதர் (Victor Chiujdea) துருக்கியின் தூதர் ராகிபே (Rakibe Şekercioğlu), சுவிட்சர்லாந்து தூதர் டொமினிக் ஃபர்க்லர்(Dominik Furgler) , ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர்அனுர திஸாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...