கபிலித்த வனப்பகுதியில் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (1) மொனராகலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ,
கபிலித்த வனப்பகுதிக்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கைக்காக சில குழுக்கள் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார்.
கபிலித்த வனப்பகுதிக்கு வெளியில் 25,000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் பயிர் செய்யாமல் ஒதுக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.