கபிலித்தை பகுதியின் காணிகளை அபகரிப்பு செய்பவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை!

Date:

கபிலித்த வனப்பகுதியில் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (1) மொனராகலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ,

கபிலித்த வனப்பகுதிக்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கைக்காக சில குழுக்கள் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார்.

​​கபிலித்த வனப்பகுதிக்கு வெளியில் 25,000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் பயிர் செய்யாமல் ஒதுக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...