குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது: வைத்தியர் தீபால் பெரேரா!

Date:

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையின்போது குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் போதாமை கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த வைத்தியர் ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விட பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களும் தங்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...