ஜனாதிபதி கோட்டா செல்லும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதன்போது, போராடும் குழுக்கள் வளர்க்கப்படுவதால் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது என்ற வதந்தி சமூகத்தில் நிலவுகிறது.
ஒரு நேர்காணலின் போது, இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் வரை போகமாட்டேன் என ஜனாதிபதி கூறுகின்றாரே, அதற்கேற்ப இரண்டரை வருடங்கள் பல்கலைக்கழகங்களை திறக்காமல் இருக்க நினைக்கின்றார் எனவும் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஏற்கனவே பல்கலைக்கழகம் திறக்கப்பட்டு விரிவுரைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி செல்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும், அந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது ஜனாதிபதியே எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.