சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் : பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து நேற்றையதினம் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, ஊழியர் மட்ட உடன்படிக்கைகளை இறுதி செய்வதற்கு பணியாளர் குழுவொன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாட்டை எட்டியதன் பேரில் நிதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...