‘சில எம்.பி.க்கள் மற்றவர்களின் உடைகளை அணிந்து தான் சபைக்கு வருகிறார்கள்’ : பிரசன்ன

Date:

தரித்திரம் பிடித்தவர்கள், கஞ்சா அடிப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததனால் மற்றவர்களின் உடைகளை அணிந்து கொண்டுதான் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகைத் தருகின்றார்கள் என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வாய்மொழிப் பதிலை எதிர்பார்த்து எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த சம்பவங்களை தூண்டிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்றும் இங்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு அரச நிறுவனங்களுடன் சேர்ந்து தனது வீட்டிற்கு தீ வைத்தவர்கள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தமது கட்சிக்குள் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1977ஆம் ஆண்டு தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அப்போது முழு குடும்பமும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஒரே அறையில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குவது இன்று நேற்றைய தினம் எடுக்கப்பட்டதல்ல எனவும், மதிவெல வீட்டுத்திட்டத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த வீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இந்த விடயத்தை எவரும் உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும் எனவும் சிலர் இங்கு புனிதர்களாக பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடற்ற அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளை ஆராய்வது தனது கடமை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...