துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை விதியுங்கள்: பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் கோரிக்கை!

Date:

ஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அச்சிறுமி அணிந்திருந்த காதணிகளையும் கொள்ளையிட்டுள்ளார்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இக் குற்றச் செயல் காரணமாக சமூகத்தில் பல அவமானத்துக்குள்ளானதால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குங்கள் என பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்ட சம்பவமொன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இரவு நேரத்தில் தந்திரமான முறையில் வீட்டுக்குள் நுழைந்த நபர் தாய் மற்றும் மூத்த சகோதரிகளுக்கிடையே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்துடன்அச்சிறுமி அணிந்திருந்த காதணிகளைக் கொள்ளையிட்டுள்ளார். இந்த ஐந்து குற்றங்களுக்காக இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக உறுதிசெய்யப்பட்ட 40 வயதுடைய ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் 60 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் 95,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சந்தேக நபர் முதல் தடவையிலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதால் குற்றவாளியான நபருக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிட்ட நீதிபதி, இவ்வாறு அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் நான்கரை வருட சிறைத்தண்டனை விதித்ததோடு, சிறைத் தண்டனை காலத்தை ஒரேயடியாக அதாவது ஒரு வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் வழங்குவதற்கும் உத்தரவிட்டார்.
குற்றவாளிக்கு தண்டனையை விதிப்பதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நீதிமன்றத்தில் கூறுவதற்கு ஏதேனும் உள்ளதா? என வினவியபோபோதே சிறுமி மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறுமி நீதிமன்றத்தில் கூறியதாவது,..
எட்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இந்தக் குற்றச் செயலின் காரணமாக தான் சமூகத்தில் அநேக அவமானத்துக்குள்ளானதால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குங்கள் என நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிக்கு குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்க முடியாதென பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தெளிவுபடுத்திய நீதிபதி குற்றவாளிக்கு கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...