இந்திய கடனுதவியின் கீழ் 40,000,000 மெட்ரிக் டன் டீசலுடன் கடைசி எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு வந்தடைந்தது.
பல நாட்களாக டீசல் இன்றி மக்கள் வரிசையில் காத்திருக்கும் பின்னணியில் இந்தக் கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருளுக்காக இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை டீசல் வரிசைகள்.
சிலர் பெற்றோல் நிலையங்களில் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள பின்னணியில் அது அமைந்துள்ளது.
இன்று காலை சிலர் எரிபொருள் வரிசையில் வாகனங்களை விட்டுச் செல்வதையும் காணமுடிந்துள்ளது. நேற்று பிற்பகல் பல பகுதிகளில் பெற்றோல் கிடைக்கப்பெற்றாலும் பெற்றோல் நிறைலயங்களின் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேவேளை, எரிபொருள் விநியோகம் செய்யும் பகுதிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று வெளியிட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு முன்னர் பணம் செலுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறானதொரு தொகையை செலுத்துவது கடினம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கேன்களுக்கான எரிபொருளை வெளியிட வேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.