நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து அரசு தரப்பில் விளக்கம்!

Date:

அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து பணம் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வட்; திருத்தத்தின் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஊடக நிறுவனங்களின் வருமானத்தை விட அரச நிறுவனங்களின் வருமானம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த மாத இறுதிக்குள் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க பிரதமர் எதிர்பார்க்கிறார். ஜூலை 10ம் திகதிக்குள் பெட்ரோல் டேங்கர் வாங்க முயற்சி எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதேவேளை டீசல் கப்பல் அடுத்த மாத முற்பகுதியில் வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருட இறுதியில் சுமார் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இருந்த எரிபொருள் தாங்கி ஒன்று கடனுதவி வழங்கப்படாமையால் நாட்டை விட்டு வெளியேறியதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடனுக்கான கடிதங்களுக்காக இலங்கையில் உள்ள அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ஒரு மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளது.

மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் 3.2 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

அதன்படி டீசல் 11,000 மெற்றிக் தொன், பெற்றோல் 5,000 மெற்றிக் தொன், 30,000 மெற்றிக் தொன் எரிபொருள் மற்றும் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

38,000 மெற்றிக் தொன் டீசலை பெற்றுக்கொள்ள இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நான்கு எரிபொருள் தாங்கிகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஒரே ஒரு கப்பலை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் எவ்வாறான விலை கொடுத்தும் எரிபொருளை பெற்று மக்களுக்கு விநியோகிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...