நாட்டின் சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது:மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் முறையான அமைப்பு இந்த வாரத்தில் கூட ஏற்படுத்தப்படாவிட்டால் சுகாதாரம் மேசமாகும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊழியர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் சத்திரசிகிச்சை மற்றும் வைத்தியசாலை கிளினிக்குகளை நடத்த முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அப்படியானால் மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் செய்யும் சூழல் ஏற்படும் என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ சங்கத்தின் 31 கிளைகளின் பிரதிநிதிகள் நேற்று (26) பிரச்சினைக்குரிய நிலைமை தொடர்பில் சந்தித்துள்ளனர்.

சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில் நாளை (28) சுகாதார அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...