நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது பரவலான வன்முறைகளினால் ஏற்பட்டுள்ளதாக எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
அதேநேரம் இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், அரசாங்கத்திற்குள் இன்னும் சர்வகட்சி உடன்பாடு எட்டப்படவில்லை, அமைச்சுக்களுக்கு இதுவரை கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.