தாம் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தம்மை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட விவாதங்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது நாட்டின் ஜனாதிபதியை தவறாக பேசக்கூடாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதவேளை ஜனாதிபதிக்கு தற்போதே பயிர்களை வளர்ப்பதற்கு யோசனை வந்துள்ளது. எனினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து தற்போது தாடி மற்றும் மீசையைதான் வளர்க்கமுடியும் என்று துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்து இதனை எதிர்கட்சி வலியுறுத்தியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்தார்.
எனினும் இதன்போது மூத்த அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச போன்றோர் ஏன் அவருக்கு தவறுகளை சுட்டிக்காட்டவில்லை என்று இந்துனில் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை உலகத்தினால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியும், நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமரும் இணைந்து நாட்டை ஆட்சி செய்வதாக குறிப்பிட்ட இந்துனில், இவர்களை நம்பி, சர்வதேச நிதியுதவிகளை வழங்காது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, பிரசன்ன குற்றவாளியாக இருந்து கொண்டு, தம்மை விமர்சனம் செய்யமுடியாது என்று இந்துனில் குறிப்பிட்டார்.