இன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை மக்கள் மீது பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக சில முஸ்லிம் நாட்டினுடைய தூதரகங்கள் இந்த வகையில் செயற்பட்டு வருவதினை எம்மால் பார்க்கமுடியுமானதாக இருக்கின்றது.
அந்த வரிசையில் பங்களாதேசை மையமாகக் கொண்ட மருத்துவக்குழு இலங்கைக்கு வந்து மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
இன்று கோவத்த ஜூம்மா பள்ளிவாயலில் பங்களாதேஷ் அமைப்புகளான டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளை நிறுவனம் (DCH Trust) மற்றும் சமூக முன்முயற்சி சங்கம் (CIS) என்ற இரு நிறுவனங்களும் இணைந்து மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இலங்கை எம் எப் சி டி (MFCD) அமைப்புடன் இணைந்து நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் காணப்படுகின்ற மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான உளர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.