புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்: சஜித்

Date:

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (6) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, நாட்டின் புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இலங்கை மூளையில்லாத மக்கள் அவலத்தை நாடு சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...